சீனாவில் வெள்ளப்பெருக்கு – பிரம்மாண்ட புத்தரின் கால்விரல்களைத் தொட்ட நீர்

சீனாவில் 1949க்குப் பிறகு முதன்முறையாக பிரம்மாண்ட புத்தர் சிலையின் கால்களை எட்டியது வெள்ளப்பெருக்கு. இதனால் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீனாவில் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றுமாறு கட்டாயப்படுத்தி உள்ளது சீன அரசு. தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான 71 மீட்டர்(233 அடி) பிரம்மாண்ட புத்தர் சிலையை பாதுகாக்க, மணல் மூட்டைகளை பயன்படுத்தியுள்ளனர்.

1949க்குப் பிறகு முதன்முறையாக சேறுடன் கூடிய வெள்ளப்பெருக்கு புத்தரின் கால்விரல் வரை உயர்ந்திருக்கிறது. நதியைப் மேற்பார்வையிடும் அரசாங்க அமைப்பான யாங்சே நீர்வள ஆணையம் செவ்வாக்கிழமை பிற்பகுதியில் ரெட் அலார்ட்டை அறிவித்தது. சில கண்காணிப்பு நிலையங்களில், நீர்வரத்து குறிப்பிட்ட அளவைவிட 5 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாங்சேயில் வெள்ளத்தைத் தணிக்கும் வகையில் கோர்ஜஸ் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய நீர்மின் நிலையத்தில் நீர்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 74,000 கனமீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட உயர்ந்துவிட்டதாக நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாங்சே ஆற்றுக்குக் கட்டப்பட்ட அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றும் என்பதை காட்டமுடியாத சூழலில் அதிகாரிகள் உள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே