டெல்லி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.

சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. 

விழாவுக்கு முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செங்கோட்டை வந்த அவர் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றினார். 

7வது முறையாக தேசியக்கொடியேற்றும் பிரதமர் மோடி, வழக்கம் போல தலைப்பாகையுடன் விழாவில் பங்கேற்றார்.  கோலகலமாக கொண்டாடப்படும் சுதந்திர தின விழா, கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அதே நேரத்தில் தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர்.  சுதந்திர தின விழாவில் கலந்து  கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து  வந்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே