#BREAKING : மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி!

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் சுயதனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்தபடியே காணொலி காட்சி மூலம் நடவடிக்கைகள் எடுப்பேன் என்றுள்ளார்.

இந்தியாவில் மாநில முதல்வர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே