#BREAKING : தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 22) 5849 பேருக்கு கொரோனா; 74 பேர் பலி

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,849 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,849 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,171 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 74 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே