கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT- PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

பரிசோதனையில் தொற்று விகிதத்தை 5 சதவீதத்திற்கு கீழ் குறைப்பதே குறிக்கோள்.

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் விகிதம் வெகுவாக கொரோனா மரண விகிதத்தை 1 சதவிகிதத்திற்கு கீழ் குறைக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4% என்ற அளவிற்கு குறைத்துள்ளோம். தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.2% ஆக குறைந்துள்ளது.

போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை அரசு செய்து வருவதால் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. 

ரோம்டேசிவர் அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே அதிகமாக தமிழகம் கொள்முதல் செய்து மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 6 மாதங்களில் 831 கோடி செலவிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே