மழைக்காலத்துல உடம்புல இருக்கிற கழிவை வெளியேத்தணுமா? இந்த ஜூஸ் குடிங்க போதும்…

நாம் உண்ணும் உணவில் சிறிது கவனம் செலுத்தலாம். உணவு முறை மாற்றம் என்றால், நீங்கள் இதுவரையிலும் சாப்பிட்டு வந்த உணவுமுறையை அப்படியே மாற்றிவிட்டு, குளிர்காலத்தில் பரவும் நச்சுத்தன்மை உள்ள தொற்றுகளில் இருந்து விடுபட ஆரோக்கியமான பாலக் ஜுஸ்.
இப்போது பெருந்தொற்று காலம் என்பதால், உண்ணும் உணவில் சிறிது கவனம் செலுத்தலாம். உங்களின் உணவுப் பழக்கத்தை முற்றிலுமாக மாற்றி சாலட் போன்ற உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.

நம்மில் பெரும்பாலானோர் எல்லாவற்றிலும் எண்ணெய் பசையுடைய கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய உணவில் கொஞ்சம் கூடுதல் செலுத்தலாம்.

குறிப்பாக பாலக் கீரை போன்றவற்றை இந்த சமயங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது கூடுதல் பலன் தரும். பாலக் கீரையானது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இது நமது சிறந்த குளிர்கால உணவு வகைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாது, இதில் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பண்புகள் காரணமாக உடலை உட்புறமாக சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும் பாலக் கீரையில் மிக அதிகமான
வெவ்வேறு ஆக்ஸிஜனேற்ற ஃபிளாவனாய்டு கலவைகள் உள்ளன. அவை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் . அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது. பாலக் கீரை சாறு உட்கொள்வதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சுவை

பாலக் கீரை பொதுவாக கசப்புத் தன்மை கொண்டது. இது மற்ற பாகற்காய் போன்ற காய்கறிகளின் கசப்புத் தன்மை போல் இல்லாமல், சற்று வித்தியாசமான கசப்புச் சுவை கொண்டது.

பாலக் கீரைக்கு ஒரு தனித்துவமான கசப்பு சுவை உள்ளதால் இது பலருக்கும் பிடிக்காது எனவே பாலக் சாற்றின் சுவையை மேலும் அதிகரிக்க உங்கள் சாறுடன் ஆப்பிள் ஜுஸ் சேர்க்கலாம். அதிலும் க்ரீன் குளிர் மற்றும் மழைக்காலங்களில் பரவும் நச்சுத்தன்மை உள்ள தொற்றுகளில் இருந்து காப்பாற்றும் பாலக் ஜுஸை நம்முடைய வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை – 1 மீடியம் சைஸ்
ஆப்பிள் – 1 மீடியம் சைஸ்
தண்ணீர் – அரை கப்
புதினா இலைகள் – 1 கட்டு
செய்முறை

பாலக் ஜூஸ் தயாரிப்பதற்கு முன்பாக, கீரையை நன்கு இரணடு, மூன்று முறை மண் ஏதும் இல்லாமல் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

அலசிய கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் ஆப்பிளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் புதினா இலைகளையும் அலசி வைத்துக் கொண்டு, இந்தக் கலவையை ஒரு மிக்ஸி அல்லது பிளண்டரில் சேர்த்து, அரை கப் தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இன்னும் கூடுதலாக சுவை தேவைப்படுவோர் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் துருவிய இஞ்சியும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரை சேர்க்கக்கூடாது.

நன்கு அரைத்த கலவையை வடிகட்டி சாறெடுத்துக் கொள்ளுங்கள். பாலக் ஜூஸ் ரெடி. இந்த ஜூஸை காலை வேளையில் குடிப்பது மிகவும் நல்லது. நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்திருக்கும். குளிர்காலத்தில் ஏற்படும் நச்சுத் தொற்றுக்களை உங்கள் அருகிலேயே அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே