NLC இரண்டாவது அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின்நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

NCL நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே