தமிழகம் வந்தது 1.5 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள்!!

தென் கொரியாவிலிருந்து தமிழகத்திற்கு 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

இதற்கு விளக்கமளித்திருந்த சுகாதாரத்துறை புதிய பிசிஆர் பரிசோதனை கருவிகள் தென்கொரியாவில் ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்த பிசிஆர் பரிசோதனை கருவிகள் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யமுடியும். 

இந்தக் கருவியில் தான் ரத்த மற்றும் சளி மாதிரிகளில் கொரோனா இருப்பதைக் கண்டறிய முடியும்.

இந்நிலையில் தமிழக அரசு கொடுத்திருந்த ஆர்டரின் அடிப்படையில், தென்கொரியாவிலிருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

இது மாவட்டம் தோறும் பின்னர் பிரித்து அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே