உலக சுகாதார நிறுவன முக்கிய பதவிக்கு ஹர்ஷ வர்தன் தேர்வு

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்க உள்ளார்.

ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு சார்பில் 73-வது கூட்டத்தொடர், காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் 194 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியக்குழு கடந்த ஆண்டு ஏற்கெனவே முடிவெடுத்ததையடுத்து, நிர்வாக குழு தலைவராக ஹர்ஷவர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 22ம் தேதி அவர் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.

34 உறுப்பினர்களை கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக தற்போது ஜப்பானைச் சேர்ந்த Hiroki Nakatani இருந்து வருகிறார்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே