மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தேசிய அளவிலான போராட்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்து பணியாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய ‘ஒயிட் அலர்ட்’ என்னும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

மேலும், தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளில் வெள்ளை கோட்டுடன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் டாக்டர்கள் மற்றும் மருத்துவ சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது டாக்டர்களின் பாதுகாப்பில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும், அவர்களைப் பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அமித்ஷா அவர்களுக்கு உறுதியளித்தார்.

மேலும், இந்த அடையாள போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே