ராஜஸ்தானில் புதிதாக 52 பேருக்கு கரோனா..

ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை 52 பேருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. மொத்தம் இம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,628 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூரில் 34 பேர் உள்பட அம்மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 52 பேருக்குப் புதிதாக இன்று நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாகக் கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

தில்லியில் உள்ள தனியார் ஆய்வகத்திற்கு சுமார் 4000 இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் தற்போது வரத் தொடங்கியுள்ளன.

எனவே, இன்றும், நாளையும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில், ஜெய்ப்பூரில் (34), ஜோத்பூர் (5), பில்வாரா (4), டோங்க் (2), தௌசா, ஜெய்சால்மர், நாகூர், ஸ்வாய் மாதோபூர் மற்றும் ஜுன்ஜுனு ஆகிய இடங்களில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது.

கரோனாவுக்கு இதுவரை 1,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே