ரஜினியின் தர்பார் ட்ரெய்லர் ரிலீஸ்..!!

தர்பார் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.

ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார்.

மும்பையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக மும்பையிலேயே நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகிறது.

இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே