நடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு; இப்படியும் ஒரு காதல் விளம்பர விளையாட்டு ?

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். 

இவரின் ‘பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், “தாராள பிரபு” போன்ற படங்கள் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றது.

குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் அதிக அளவில் உருவானார்கள்.  

இந்நிலையில் இவர் தற்போது நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து பிரியா பவானி சங்கர் செய்துள்ள ஒரு ட்விட்டர் பதிவில், ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல… நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு ஹரிஷ் கல்யாண், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூற தொடங்கியுள்ளனர்.

மற்றொருபுறம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படத்தின் ப்ரோமோஷன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ நாளை மாலை 5 மணிக்கு, அவர்கள் காதலிக்கிறார்களா அல்லது படத்தின் ப்ரொமோஷனுக்காக இப்படி செய்தார்களா என்பது தெரியவரும். 

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே