பென்ஷன் கோரி நீதிமன்றத்தை நாடிய 99 வயது முதியவருக்காக கொந்தளித்த நீதிபதி..!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கபூர் நேதாஜி என்ற முதியவர், இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

அவர், 1997-ம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தனக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கக்கோரி விண்ணத்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

23 ஆண்டுகளாக தனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கபூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்க விசாரித்த நீதிபதிகள், சுதந்திர போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 99 வயது முதியவர் நீதிமன்றத்தை நாடி இருப்பதை சுட்டிக்காட்டினார். 

இந்த வயதில், நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார் நீதிபதி.

அத்துடன் இந்த மனுவுக்கு 6-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே