தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901.75 கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

15வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.901.75 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 15வது நிதிக்குழு மற்றும் ஜல்சக்தி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நிதியமைச்சகம் மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட தவணையாக ரூ.15,187.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தூய்மைபடுத்துதல், குடிநீர் சப்ளை, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும்.

இவ்வாறு அந்த பதிவில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே