பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நூற்றுக்கணக்கான பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் எங்கு நடந்தது இந்த சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் யார் ? அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கானா காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார் அதில் சென்னையை சேர்ந்த பிரதீப் என்பவர் தனக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக தெரிவித்திருந்தார், இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் காவல்துறையினரின் விசாரணையில் பிரதீப் என்பவர் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் என்பதும் பிரபல நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி கொண்டு தனது உண்மை பெயரான செழியன் என்பதை மறைத்து பெண்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது புகார் அளித்த ஹைதராபாத் பெண்ணைப் போன்று 16 மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்றதும் போலி இணையதள முகவரியின் பெயரில் பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்ததையடுத்து தெலுங்கானா காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர் இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த செழியனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. பெரும்பாலும் வடமாநில பெண்களை குறி வைத்தே இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது இந்நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மியபூர் காவல் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .