இந்தியாவில் 80% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… – ICMR

காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது!!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,357 ஆகவும், இந்தியாவில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 560 ஆகவும் அதிகரித்துள்ளதாக இந்தியா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருக்கின்றனர் என்றும்; இது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கொரோனாவுக்கு அறிகுறியாக சளி, காய்ச்சல் ஆகியவற்றை மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் அந்த அறிகுறி இல்லாமலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன்படி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கவலை அளிக்கக்கூடிய வகையில் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எந்த அறிகுறிகளையும் காட்டாத COVID-19 நோயாளிகளைக் கண்டறிவதற்கான சோதனை மூலோபாயத்தில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள் கூறியதாவது…

என்ன மாற்றம் செய்ய முடியும்? அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. தொற்று எங்கிருந்தாலும் அல்லது ஹாட்ஸ்பாட்டில் , இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்க்கான (ஐ.எல்.ஐ) சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை” என அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

அதேபோன்று, டெல்லியில் நேற்று கொரோனா உறுதி செய்யபட்ட 186 பேருக்கும் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே