கெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..!!

சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சிலை உள்ள குஜராத்தின் கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள் சேவையை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

குஜராத்தின் கேவாடியாவில் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒற்றுமை சிலை எனவும் அழைக்கப்படுகிறது.

கேவாடியாவை சிறந்த சுற்றுலாதலமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, வாரணாசி, மும்பை, அகமதாபாத், டெல்லி, ரெவா உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே