ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் பலி..!!

ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று (செப்.,20) மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் காயங்களுடன் பிடிபட்டார்.அந்த இளைஞர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் காட்சிகள் பல்கலைக்கழக சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளன.

மேலும், வாலிபருக்குப் பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.ரஷ்யாவில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் கிழக்கு ரஷ்யாவில் ஒரு கல்லூரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக 2018ல், க்ரிமியாவில் கெர்ச் தொழில்நுட்பக் கல்லூரியில் வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.பெர்ம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் காயங்களுடன் பிடிபட்டான். இதன் காரணமாக ரஷ்யாவில் துப்பாக்கி விற்பனை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் புதிய கொள்கைகளை வகுக்க அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே