இந்தியாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது, இதற்கு உணவுகளை டெலிவரி செய்துவரும் Zomato நிறுவனமும் தப்பவில்லை, பொருளாதார மந்தநிலை காரணமாக உணவுகளை ஆர்டர் பெறுவது தற்போது மிகவும் குறைந்து வருகிறது இதனால் தன்னுடைய ஊழியர்களில் 600 பேரை எந்த ஒரு கேள்வியும் இன்றி உடனடியாக பணியில் இருந்து நீக்கியுள்ளது Zomato நிறுவனம், இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் கூட இதை கடுமையாக கண்டித்துள்ளார்கள் . சமூக வலைதளங்களில் தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்களும் விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.
Zomato நிறுவனத்தின் கோல்டு திட்டத்தினால் உணவுகளை தயார் செய்யும் ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தி உள்ளார்கள் இதனால் பல ஆயிரக்கணக்கான ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுக்கும் Zomato நிறுவனத்திற்க்குமான இணைப்பைத் துண்டித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. Zomato நிறுவனம் மற்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை விட மிக அதிகமான சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது, அதுதான் தற்போது பல்வேறு சிக்கல்களுக்குமான காரணமாகவும் அமைந்திருக்கிறது.
- புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் கலைவிழா கோலாகலம்
- விக்ரம் லேண்டருடன் 14 நாட்களுக்குள் தொடர்பு