டெங்கு காய்ச்சலால் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சலால் ஐந்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகள் மகேஸ்வரிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவசக்தி நகர் பகுதியில் குப்பை மற்றும் கழிவு நீர் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வருவதாக மகளை இழந்த சோகத்தில் இருக்கும் மகேஸ்வரியின் பெற்றோர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே