கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜியைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதனால் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜியைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்தது.

இதை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சஞ்சீப் பானர்ஜியைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே