காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வரும் பெருநகர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு ஏற்கனவே வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆனது.

இந்நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய 31 பேர் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நோய் பாதிப்பினால் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே