ஒரே நாளில் 22,854 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டில் ஒரு நாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் இன்றுதான் அதிகம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 85 ஆயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 226 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே