ரஷ்யாவின் VOLGA நதியில் மூழ்கி 4 தமிழக மாணவர்கள் உயிரிழப்பு.. முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

ரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக, சுழற்சியில் சிக்கி 4 மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியால் மிகுந்த மனவேதனையடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 4 மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பெரிய நகரான வோல்கோகிராட்டில் உள்ள வோல்கா நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்ததுள்ளாக நேற்று முதல்கட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நால்வரும் மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

VOLGA நதிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் 4 பேரும், குளிப்பதற்காக நதியில் இறங்கியபோது நீரில் மூழ்கி பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகியோர் ஆவர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே