தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில்களுடன் மொத்தமாக 13 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் , பேருந்து சேவைகள் மீண்டும் இயங்க அரசு அனுமதி அளித்தது.

அதே போல பயணிகள் ரயில்களும் வரும் 7 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த, திருச்சி – செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி – செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை – விழுப்புரம், கோவை – காட்பாடி, அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை உள்ளிட்ட சிறப்பு ரயில்களுடன் சென்னை – கோவை மற்றும் சென்னை – திருச்சி இடையே மொத்தமாக 9 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை விடுத்ததன் பேரில், தற்போது மொத்தமாக 13 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதாவது. சென்னை- கன்னியாகுமரி இடையே செப்.8 ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்; சென்னை- மேட்டுப்பாளையம், திருச்சி-நாகர் கோவில் இடையே செப்.7 ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் நாளை முதல் தொடங்க உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே