அக்.5ம் தேதி முதல் தினமும் 2ஜி வழக்கு விசாரணை நடத்தப்படும் – டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு..!!

அக்டோபர் 5 முதல் 2ஜி வழக்கு விசாரணை தினசரி நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.

இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கக்கோரி சி.பி.ஐ, அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்றார்.

வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தினந்தோறும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையேற்றே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனவே நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்து தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே