இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி அரை சதம் கடந்தார்.
கடந்த போட்டியிலும் கோலி அரை சதம் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ரன் குவிக்க தடுமாறி வரும் நிலையில் கோலி சிங்கிளாக நின்று அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
அவருக்கு உறுதுணையாக அஷ்வின் கைகொடுத்து வருகிறார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25வது அரை சதத்தை கோலி விளாசியுள்ளார்.
107 பந்துகளில் இந்த அரை சதத்தை அவர் விளாசியுள்ளார். அதில் 7 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்திய அணி இந்த ஆட்டத்தில் 370 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை ஆடுகளம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் கோலி இந்த அரை சதத்தை விளாசியுள்ளார்.