நர்சிங் உள்ளிட்ட 22 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
பி.எஸ்.சி. நர்சிங்,ரேடியோ கிராபி & இமேஜிங் டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி, மெடிக்கல் லேபரட்டரி, ஆபரேஷன் & அனஸ்தீஷியா டெக்னாலஜி உள்ளிட்ட 22 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 9 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 22 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கன தரவரிசைப்பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
முதல்நாளான இன்று, காலை 9.30 மணி முதல் 12 மணி வரை சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வும், பிற்பகலில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
இன்றைய கலந்தாய்வுக்கு 1,223 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.கலந்தாய்வுக்கு வருவோர் கல்வி, வருவாய், இருப்பிடச் சான்றுகளை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.