சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மாரத்தானில் பங்கேற்ற 20 வீரர்கள் பலி..!!

சீனாவில் ஆலங்கட்டி மழை பெய்ததால் 20 ஓட்டப்பந்தய வீரர்கள் உயிரிழப்பு. 5 பேரை காணவில்லை.

சீனாவில் நோய் தொற்று மற்றும் இயற்கை சீற்றம் அந்நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சீனாவின் வடமேற்கு கான்சூ மாநிலம் பைன் நகரில் உள்ள மலைப் பகுதியில் 100 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது திடீரென வானிலை மாறி, போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதிக காற்றுடன், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே