2 ஆண்டுகளுக்கு மேலாக சிறுமிக்கு பாலியல் தொல்லை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கண்டுபிடித்த போலீசார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி புகார் தெரிவித்திருந்தார்.

அவரது வீட்டை சுற்றி போலீஸ் போடப்பட்டுள்ளது

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே