18 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தவரை கேலி செய்யும் வகையில் மேக் அப் அணிந்தமைக்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இவர் தனது 29-வது வயதில் வெஸ்ட் பாய்ன்ட் கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அரேபியன் நைட்ஸ் என்ற இரவு விருந்தின் போது ட்ரூடோ கறுப்பினத்தவரைப் போல் வேடமணிந்து தோற்றமளித்தது, அந்த பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளியானது.

இதை அமெரிக்காவைச் சேர்ந்த டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. ட்ருடோ 2-வது முறையாக பிரதமராவதற்காக தேர்தலுக்கு தயாராகும் நிலையில், கறுப்பினத்தவரை கிண்டல் செய்வது போல் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரூடோ எடுத்த புகைப்படம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது பிரச்சார விமானத்தில் இருந்த படியே ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த புகைப்படத்தில் இருப்பது தான் என ஒப்புக் கொண்டார். தான் தன் இளமைப் பருவத்தில் செய்த தவறுக்காக தற்போது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், தான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

அதே சமயம் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், பிறப்பால் பெற்ற நிறத்தின் அடிப்படையில் ஒருவரைக் கேலி செய்யும் இனப்பாகுபாடு நல்லதல்ல என ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே