கூட்டணி! இபிஎஸ் – ஓபிஎஸ்க்கு அதிகாரம்

  • முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
  • நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  • நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  • நகர்புற வீட்டு வசதித் திட்டத்தில் தமிழகத்தையும் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
  • உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  • இலங்கையில் மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக பொதுக்குழு
  • தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி
  • ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசை பாராட்டி தீர்மானம்
  • சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
  • அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்கிறது
  • கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்த முடிவெடுக்க ஓபிஎஸ் – இபிஎஸ்சுக்கு முழு அதிகாரம் – அதிமுக பொதுக்குழு
  • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை எனும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  • தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  • தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்று இருப்பதற்கு பாராட்டு
  • பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  • கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  • தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக, வாரிசு அரசியலை வீழ்த்துவது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே