இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,576 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 58,419 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,98,81,965

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 58,419

இதுவரை குணமடைந்தோர்: 2,87,66,009

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 87,619

கரோனா உயிரிழப்புகள்: 3,86,713

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1576

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,29,243

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 27,66,93,572

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே