திருவாரூர் அருகே ஊராட்சித் தலைவர் பதவி 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ.15 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடமேலையூர், கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் 1500 வாக்குகள் உள்ளது.

இந்த ஊராட்சியில் தலைவர் பதவிக்கு 4-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்தது.

இந்நிலையில் அந்த ஊராட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பேசி, ஊராட்சியின் பொது நிதி தேவைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட முடிவு செய்தனர். 

இதற்காக அங்குள்ள கோயிலில் கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் 2 லட்ச ரூபாயில் தொடங்கிய ஏலம், 15 லட்சத்தில் முடிவடைந்தது.

ஏலத்தில் வெற்றிபெற்ற சித்ரா ராமச்சந்திரன் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிப்பது என கிராமத்தினர் முடிவு செய்தனர்.

உள்ளாட்சி பதவிகளுக்கான ஏல நடைமுறைகளில் ஈடுபட கூடாது என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே