தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,40,176 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,40,176 வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வருகிற 14- ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஊரடங்கை மீறி வெளியில் வாகனங்களில் சுற்றுவோா் மீதும், வியாபாரிகள் மீதும், தேவையற்ற இடங்களில் நிற்போா் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஊரடங்கை மீறியதாக கடந்த 25 -ஆம் தேதி முதல் 1,40,176 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

1,19,286 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே