கொங்கு மேல்நிலைப் பள்ளியின் 12-ம் ஆண்டு விழா….

கொங்கு மேல்நிலைப் பள்ளியின் 12ம் ஆண்டு விழா நடைபெற்றது.

கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள கொங்கு மேல்நிலைப் பள்ளியில் 12ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கம்பன் கவிமணி புலவர் ராமலிங்கம் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கரூரை சேர்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக நரிகட்டியூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் விஜயலலிதாவுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், பள்ளி கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அட்லஸ் நாச்சிமுத்து மற்றும் ஆசிரியர் ராமலிங்கம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பாலு குருசுவாமி, தலைமையாசிரியர் மோகன், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : மு. மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே