கடந்த 24 மணி நேரத்தில் 10,627 பேர் கைது, ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் !!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இதன் பாதிப்பு வீரியம் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது இந்த ஊரடங்கில் சில தளர்வுகளையும் மாநில அரசுகள் அறிவித்தது.

இந்த நேரத்தில் பாதிப்பு அதிகம் அடைந்துள்ளதால் தமிழக அரசு கொரோனா அதிகம் பரவியுள்ள சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு தீவிர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பல விதிமீறல்கள் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6,81,952 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடந்த 24 மணி நேரத்தில் 10,627 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர், 11051 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ரூ.25,88,400 வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஊரடங்கை மீறியதாக 4,98,193 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 6,31,260 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், ரூ.14,100,2210 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே