உடல்நிலை சரியில்லாத போது காபி அருந்துவது நல்லதா?..

பொதுவாகவே பலருக்கு காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடித்தால்தான் அன்றையே வேலையே ஓடும்.இன்னும் சிலர் பல் கூட விளக்காமல் பெட் காஃபி குடித்த பின்பு எழுபவர்களும் உண்டு. அலுவலகத்தில் வெளியில் அல்லது ஏதாவது நண்பர்கள் உறவினர்கள் சந்திப்பு, விருந்தோம்பல் இப்படி எதுவென்றாலும் என்றாலும் காஃபியே பிரதான இடம் பெறுகிறது. அதில் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் காபி குடிப்பது நல்லதா என்பது பற்றி தான் இதில் பார்க்கப் போகிறோம்.

அப்படி எல்லா இடத்திலும் எந்த நாளிலும் வெகுவாக விரும்பி அருந்துகிற காஃபின் பூர்வீகம் இந்தியா கிடயாது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவாகாஃபியின் பூர்விகம் எத்தியோப்பியா எனப்படுகிறது.அங்கு கால்டி என்பவர் ஆடு மேஉத்துக் கொண்டிருந்த பொழுது காபி இலைகளை உண்ட ஆடுகள் உற்சாகத்தில் துள்ளி ஓடியதைக் கண்டு காபியைக் கண்டுபிடித்தாராம்.இந்தியாவில் முதன்முதலாக பாபா புதின் என்பவர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று வரும் பொழுது 7 காஃபி கொட்டைகளை தாடியில் மறைத்துக் கொண்டு வந்து பியிரிட்டார் என்று வரலாறு சொல்கிறது.அன்றிலிருந்துதான் நமக்கும் காஃபின் உற்சாகம் தொற்றியிருக்க கூடும்.

காபி

உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காபி ரகங்கள் இருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவது பில்டர் காஃபிதான். அதுவும் தமிழகத்தில் கும்பகோணம் பில்டர் காஃபிக்கென்றே தனி அடையாளம் உண்டு.

அதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் அதில் இருக்கும் காஃபைன் என்னும் ஒரு வேதிப்பொருள்தான்.இதுவே குடித்ததும் சட்டென தோன்றும் ஒரு உற்சாகத்திற்கு காரணம்.இந்த காஃபின் உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடையை சீராக பராமாரிக்க உதவுகிறது.

​என்ன மாற்றங்கள்

காஃபி குடிப்பது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது. கருவுறும் திறன் 175 சதவீதம் அதிகரிப்பதாக இதற்கென நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மலச்சிக்கலை குறைத்து செரிமானத்தை ஊக்குவிக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

அளவாக காஃபி அருந்துபவர்களுக்கு பெரிதாக எதுவும் பாதிப்பு வருவதில்லை என்றாலும் உணவுக்கு பதில் காஃபியையே ஒரு கப் அருந்துபவர்கள் கூட உண்டு.நல்ல உடல் நிலையில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 400 மில்லி கிராமிற்கும் குறைவான காஃபின் உட்கொள்ளும்போது அது எவ்வித ஆரோக்கிய கேடுகளையும் உண்டாக்காது என சொல்லப்படுகிறது.பிறகு எவ்வளவு காஃபி குடிக்க வேண்டும் என சிலருக்கு சந்தேகம் தோன்றலாம்.ஒருநாளைக்கு 4 கப் வரைக்கும் அருந்துபவர்களுக்கு எந்த விதமான பின் விளைவுகளும் தோன்றுவதில்லை.

​பக்க விளைவுகள்

உடல்நலம் எவ்வித குறைபாடும் இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு காஃபி குடிப்பதில் சில பக்க விளைவுகள் உண்டென்றாலும் அதிலும் சில ஆண்டி ஆக்சிடெண்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் தன்மைகளும் உண்டு.ஆனால் அதுவே அளவிற்கு மீறி செல்லும்போது அதிகமான பக்க விளைவுகளை உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதுவே உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் காஃபி எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை இன்னும் அதிகரிக்ககூடும் எனவும் எச்சரிக்கின்றனர். அதுவும் நீங்கள் என்னவிதமான உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்து விளைவுகள் இன்னும் அதிகரிக்கலாம் அல்லது எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் தன்மை கூட வேறுபட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

​உடல் நலமின்மை

உடல் நலமின்றி சோர்வுற்று இருக்கும்போது ஒரு கப் காஃபி எடுத்துக் கொள்வது சற்று புத்துணர்ச்சி தரக் கூடியதாக இருக்கலாம்.இன்னும் சிலருக்கு காஃபி எடுத்துக் கொண்டால்தான் காலைக் கடன்களைக் கழிக்கவே முடியுமென்கிற நிலை இருக்கும்.

எனவேதான் உடல்நிலை சரியில்லாத நிலையில் உடனே காஃபி குடித்தாக வேண்டுமென்கிற உணர்வை தோற்றுவிக்கிறது.தலைவலி,சளி போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு காஃபி குடித்து முடித்ததும் உடனே ஒரு இன்ஸ்டண்ட் உற்சாகம் பிறந்து விட்டது போலவும் தலைவலி பறந்து விட்டது போலவும் ஒரு உணர்வைத் தோற்றுவிக்கிறது. ஆனால் இது எல்லாம் உண்மையிலேயே சரிதானா.

உயர் ரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு காஃபி அருந்துவது இரத்த அழுத்தத்தை மேலும் உயர்த வழி வகை செய்யும்.ஒரு ஆராச்சியில் உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் சிலருக்கு சுமார் 250 மில்லி கிராம் காஃபி வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரையில் உயர் இரத்த அழத்தம் எற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசியின்மை

அதேபோன்று ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து உட்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் போது குடிக்கும் காபியானது தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும். வேறு சில மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது செரிமான சக்தியைக் குறைத்து அஜீரணத்தை உருவாக்ககூடும். எனவே நீங்கள் சில குறிப்பிட்ட வியாதிக்கான சிறப்பு மருந்துகள் அல்லது பத்தியம் இருக்க நேரிடுகின்ற நிலையில் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்து கொண்டே பிறகே காபி அருந்துவது நல்லது. குடற்புண் அல்லது அல்சர் இருப்பவர்கள் கட்டாயம் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அருந்தியவுடன் சற்று நேரத்திற்கு அதி உற்சாகம் பிறந்தது போல தோன்றினாலும் பசியின்மையை தூண்டி உடல் பித்தத்தை அதிகரிக்கும்.

​புற்றுநோய் அபாயம்

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் அதற்கென தனியாக மாத்திரைகள் உட்கொண்டு வருவர்களும் காபியை அறவே தவிர்ப்பது நல்லது.இது நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்ககூடும். இதய படபடப்பு உள்ளவர்களும் முற்றிலும் தவிர்த்து விடுவதே சாலச் சிறந்ததாகும். ஏற்கெனவே உள்ள நோயின் தன்மையைப் பொறுத்து சில குறீப்பிட்ட மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு வருபவர்கள் காபியை தொடர்ந்து எடுத்துக் கொள்வது கணையம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

​​அழற்சி

சிலருக்கு காஃபி குடிப்பதால் ஒவ்வாமை ஏற்படக்கூடும். படபடப்பு, பதற்றம் தூக்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே