தமிழகத்தில் தீபாவளி நாளில் 106 தீ விபத்துகள் – தீயணைப்புத்துறை தகவல்..!!

தீபாவளி திருநாளில் தமிழகத்தில் மொத்தம் 106 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் அளித்துள்ளது.

சென்னையில் மட்டும் 410 இடங்களில் பட்டாசு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

90% தீ விபத்து மாலை 7 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் நடந்துள்ளது. 56 அழைப்புகள் தீவிபத்து குறித்து வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 விபத்துகள் ராக்கெட் விட்டதால் ஏற்பட்டுள்ளதாகவும், 22 விபத்துகள் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் மதுரையில் பட்டாசு நெருப்பால் அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்புதுறையினரால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மதுரை தெற்குமாசி வீதி மஹால் 2வது தெரு பகுதியில் உள்ள ஏகே அஹமத் என்ற ஜவுளிக்கடைக்கு சொந்தமான அட்டை உள்ளிட்ட பயன்படாத பொருட்களை அடுக்கிவைக்கப்பட்ட குடோன் உள்ளது.

இதற்கு அருகிலுள்ள பகுதியில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட நெருப்பு துகள் பறந்து வந்து அட்டைகள் மீது பட்டதில் அட்டை பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே