மதுரை, நெல்லை, தஞ்சையில் ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள் திறப்பு..!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் காணொலி மூலம் முதல்வர் புதிய பேருந்து நிலையங்களை திறந்து வைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

அதன்படி நெல்லை வேய்ந்தான் குளத்தில் நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையங்களை திறந்து வைத்துள்ளார். மதுரையில் நவீனமயமாக புதுப்பிக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையங்களை திறந்து வைத்துள்ளார். இதில் 57 பேருந்து நிறுத்தங்களுடன், 450 கடைகள் இயங்கும் வகையில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாம். அது போல தஞ்சையிலும் 14.48 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே