விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கணித மற்றும் அறிவியல் கண்காட்சி

சென்னை அம்பத்தூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா எனும் தனியார் பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

மாணவர்களை ஊக்குவித்து அவர்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் நோக்கில், விவேகானந்தா கல்வி கழகம் வித்யபாரதி அமைப்போடு இணைந்து ஆண்டுதோறும் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்துதல், நில அதிர்வை உணர்தல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் கணிதப் படைப்புகள் காட்சிக்கு வைத்தனர்.

கண்காட்சியில் கலந்துகொண்ட ஆவடி சிவிஆர்டிவி விஞ்ஞானி அருள் சுந்தர் காட்சிக்கு வைத்த படைப்புகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே