ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகளை விற்க திட்டம்

ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவன பங்குகளை விற்க தொழிலதிபர் அனில் அம்பானி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனங்களின் கடன்களில் 15 ஆயிரம் கோடி ரூபாயை வரும் மார்ச் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்த அனில் அம்பானி திட்டமிட்டுள்ளார்.

இந்தக் குழுமத்துக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் இருந்தன.

முக்கியச் சொத்துகளை விற்றுக் கிடைத்த தொகையின்மூலம் ஓரளவு கடன்கள் திருப்பி செலுத்தப்பட்டன.

இதனால் கடந்த ஜூலை மாதம் கடன் தொகை 93 ஆயிரத்து 900 கோடி ரூபாயாகக் குறைந்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ் கேபிட்டலைச் சேர்ந்த ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனங்களை, டிசம்பர் மாதத்துக்குள் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றிய தகவல்கள் வெளிவந்ததுமே, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே