முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைாயனது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழக அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் இரவு ஊரடங்கும், அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரமங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கண்டிகப்பாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் இதுவரை 13,113 பேர் உயிரிழந்துள்ளனர் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே