தேனியில் இன்றிலிருந்து வரும் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தவிர்த்து மதுரை, தேனி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தேனி மாவட்டத்தில் 4 டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 6 பேர் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனியில் இன்றிலிருந்து வரும் 15 ஆம் தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மளிகை, அத்தியாவசிய கடைகள் திறக்க கூடாது என்றும் மருந்தகங்கள் திறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிலும் மருந்தகங்களில் வேறு பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே