இந்தியாவில் தினமும் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பரவும் – அமெரிக்க பல்கலை எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தினமும் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மசாசேசூட்ஸ் பல்கலை எச்சரித்துள்ளது.

மசாசேசூட்ஸ் பல்கலைக்கழகம் இந்தியா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை நிறைந்த 84 நாடுகளில் உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதம் (475 கோடி மக்கள் )பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் சீனா சேர்க்கப்படவில்லை.

மசாசேசூட்ஸ் பல்கலைக்கழகத்தின்‘ ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஹஷீர் ரஹ்மந்தாத், டி.ஒய் லிம் மற்றும் ஜான் ஸ்டெர்மன் ஆகிய நோய்த்தொற்று ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் 2021- ம் ஆண்டு மே மாதத்தில் உலக மக்கள் தொகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 முதல் 60 கோடிக்குள் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

இந்த சமயத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேரை கொரோனா தொற்று தாக்கும். அமெரிக்காவில் 95,000 பேரும் தென் ஆப்ரிக்காவில் 21,000 பேரும் ஈரானில் 17,000 பேரும் இந்தோனேஷியாவில் 13,000 பேருக்கும் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இந்த காலக்கட்டத்தில் உலகிலேயே அதிகமாக பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் 1.16 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,40,000 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 6 மாதங்களில் 24 கோடியாக அதிகரிக்கும் என்றும் இறப்பு சதவிகிதம் 18 லட்சமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் , மசாசேசூட்ஸ் பல்கலையின் ஆய்வு முடிவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு இத்தகையை இடர்பாடை நாடு எதிர்கொள்வது இதுவே முதன்முறை. அதனால்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்ஸின் தடுப்பு மருந்து ஆராய்ச்சியை அதி விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. எனினும், பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்து முழுமையாக ஆராய்ச்சி முடிய 13 மாதங்கள் தேவைக்கடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Related Tags :

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே