கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு விருது

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் ஆணைப்படி,

  • திருப்பூர் மாநகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன்,
  • திருச்சி மண்டல காவல் ஆய்வாளர் ராஜசேகரன்,
  • பண்ருட்டி காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பூங்கோதை,
  • விழுப்புரம் மண்டல காவல் உதவி ஆய்வாளர் அழகிரி,
  • கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக அவர்கள் 5 பேருக்கும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் இவ்விருது வழங்கப்படும் என்றும், விருதுடன் பரிசுத் தொகையாக தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே