ஒரு லிட்டர் பால் 140 ரூபாய் எங்க தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்டது. சராசரியாக 45 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பால் 50 ரூபாயிலிருந்து 52 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதாவது சராசரியாக ஒரு லிட்டருக்கு ஐந்து ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் வரை விலை உயர்வு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய் என்று இணையத்தில் செய்தி உலா வருகிறது. இதுபற்றி தேடியபோது பாகிஸ்தானில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாலின் தேவை அதிகரித்து 115 ரூபாய்க்கு விற்ற பாலின் விலை 140 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பாகிஸ்தானியர்கள் கூறுகிறார்கள். இது அந்த மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இது அங்கு விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை விட அதிகம். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை : 113 ரூபாய், ஒரு லிட்டர் டீசல் விலை 93. ஆனால் பாலின் விலை 140.

பாகிஸ்தான் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பாலின் விலை 86 ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே