வைரலாகும் காவலர் பாடிய விழிப்புணர்வு பாடல்…

கடலூர் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தலைமை காவலர் ஒருவர் பாடிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மருதூர் காவல் நிலையத்தின் தலைமை காவலராக பொன்.சிவபெருமான் பணியாற்றி வருகிறார். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் சேதங்களை தடுக்கும் விதமாக, தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். “சாலை விதிகளை மதித்துதான் ஓட்டு, சாவே இல்லாமல் வாழ்ந்துதான் காட்டு” போன்ற விழிப்புணர்வு வரிகள் அடங்கிய அந்த பாடல், தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி, வாகன ஓட்டிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே