வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் கருடசேவை நடைபெற்றது.

திருவேங்கடநாதபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் சிறு குன்றின் மீது அமைந்துள்ள இத்தலத்தில், வெங்கடாசலபதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார்.

இங்கு புரட்டாசி பிரம்மோற்சவம் கருட சேவையையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பின்னர் வெங்கடாசலபதி மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் வெங்கடாசலபதி கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

ஆழ்வார்கள் படிகளில் இறங்கி குடை சாத்தி தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே